பல்ஸ் இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி
அமெரிக்க ஒர்லான்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் ஓமர் மதீன் என்ற துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தப்பிச் சென்ற யுவதியொருவர் உள்ளே சிக்கியுள்ள தனது நண்பியைக் காப்பாற்ற திரும்ப வந்து துப்பாக்கிதாரியிடம் சிக்கி உயிரிழந்துள்ளமை தொடர்பான மனதை நெகிழ வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அகிரா முர்ரே (18 வயது) என்ற யுவதியே தனது நண்பியான பதியன்ஸ் கார்ட்டரை (20 வயது) காப்பாற்றும் முகமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினம் அந்த இரவு விடுதிக்கு பதியன்ஸ் கார்ட்டர் தனது நண்பிகளான அகிரா முர்ரேயுடனும் தியரா பார்க்கருடனும் சென்றுள்ளார். அகிராவும் தியராவும் ஒருவருக்கொருவர் மைத்துனி உறவு முறையானவர்களாவர்.
ஓமர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய போது அகிராவும் தியராவும் அங்கிருந்து தப்பி இரவு விடுதியை விட்டு தப்பியோடியுள்ளனர். ஆனால் காரட்டரோ துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்கும் முகமாக ஏனைய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய ஏனையவர்களுடன் நிலத்தில் விழுந்து கிடந்துள்ளார்.
இந்நிலையில் இரவு விடுதியை விட்டு தப்பியோடிய அகிரா பார்க்கரைக் காணாததால் திகைப்படைந்து அவரைத் தேடும் முகமாக இரவு விடுதிக்கு திரும்பவும் வந்துள்ளார்.
இந்நிலையில் ஓமர் பார்க்கரையும் அகிராவையும் துப்பாக்கியால் சுட்டு சுமார் 3 மணித்தியாலங்களாக பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அகிரா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அதேசமயம் பார்க்கரும் தியராவும் காயமடைந்த நிலையில் உயிர் தப்பியுள்ளனர்.
தன்னைக் காப்பாற்ற வந்து தனது நண்பி உயிரிழந்தமை தன்னை பெரிதும் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பார்க்கர் தெரிவித்தார்.