விசேட அபிவிருத்தி திட்டங்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.சிறீதரன் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் பேசுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய தொழிற்சாலைகள் இயங்காமை. வட்டக்கச்சி விவசாய பண்ணை மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஆணையிறவு உப்பளம், குறிஞ்சா தீவு உப்பளம் போன்ற பாரிய தொழிச்சாலைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்றன.
குறிப்பாக வட்டக்கச்சி விவசாய பண்ணை பல நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதுடன் அங்கிருந்த விவசாய பாடசாலை 1983 காலப்பகுதியில் சுமார் 300 பேருக்கு வருடாந்தம் பயிற்சிகளை வழங்கி வந்திருக்கின்றது. ஆனால் அந்த பண்ணை தற்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சிவில் பாதுகாப்பு படையின் பயன்பாட்டில் உள்ளது.
அதேபோல் பரந்தன் இரசாயன தொழிற்சாலை மிக நீண்டகாலமாக இயக்கப்படாமல் உள்ளது. சிறிது காலத்திற்கு முன்னர் மத்திய தொழிற்துறை அமைச்சு சுமார் 500 மில்லியன் செலவில் அதனை மீள இயக்கப்போவதாக கூறியபோதும் அதற்கு பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதனை தனியாருக்கு கொடுத்தால் என்ன? எ ன்ற நிலையில் இப்போது அரசாங்கம் நிற்கிறது.
மேலும் குறிஞ்சாதீவு உப்பளம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கே கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை.
ஆணையிறவு உப்பளம் இயங்காமலேயே உள்ளது. இந்நிலையில் பாரிய தொழிற்சாலைகளை மீள இயக்குவது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ச்சியாக நாங்கள் பேசி வருகின்றபோதும் ஆக்கபூர்வமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.
வீதிகள் புனரமைக்கப்படாமை தொடர்பாக
வடமாகாணத்தில் புனரமைக்கப்படாத நிலையில் அதிக வீதிகள் உள்ள மாவட்டமாக கிளிநொச்சி மாவ ட்டம் இருக்க கூடும் என்றே நினைக்கிறேன்.
வீதிகள் புனரமைக்கப்படாமை என்பதை சாதாரண விட யமாக கருத முடியாத நிலை கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை உள்ளது.
காரணம் அதிகளவில் விவசாயம் செய்யப்படும் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வரும் வீதிகள், அதிகளவு கடலுணவு உற்பத்தியாகும் இடங்களிலிருந்து நகருக்கு செல்லும் வீதிகள் மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படா மல் உள்ளது.
இதனால் தங்களுடைய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் மக்கள் பெரிதும் சிரமப்படு கின்றார்கள். இது ஒருவகையில் மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
வீதிகள் சீரின்மையினா ல் பெரும்பாலும் மக்கள் தங்கள் உற்பத்திகளை உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே விற்பனை செய்து விட நினைக்கிறார்கள். அதனால் தங்களது உற்பத்திக்கு செலவிட்ட பணத்தை கூட அவர்களால் பெற்று கொள்ள இயலாத துர்ப்பாக்கிய நிலையும் உருவாகிறது.
இந்நிலையில் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளினால் ஒரு தொகுதி வீதிகள் ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ளது எனினும் விவசாய வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளின் புனரமைப்பு கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. காரணம் போதியளவு நிதி இல்லாமையே.
குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக
கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு சமகாலத்தில் அதிகளவு காணப்படுகின்றது. சுமார் 50ற்கும் மேற்பட்ட கிராமங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
குறிப்பாக பூநகரி பிரதேசத்தை அண்டிய கிராமங்கள், கண்டாவளை பிரதேசத்தை அண்டியுள்ள சில கிராமங்களில் இந்த குடிநிர் தட்டுப்பாடு அதிகளவில் காணப்படுகின்றது. அதேபோல் பாரதிபுரம், மலையாளபுரம் கிஸ்ணபுரம் போன்ற கிராமங்களில் மிக ஆழமான கிணறுகளை தோண்டியே மக்கள் குடிநீரை பெற்று கொள்ளவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் இரணைமடு குளத்தில் தண்ணீர் உள்ள போது குடிநீர் தட்டப்பாடுள்ள கிராமங்களுக்கு தண்ணீரை வழங்குவதற்கு ஒரு யோசணை மேற்கொண்டிருக்கிறோம். அது சாத்தியமானால் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெரிதும் குறைக்கப்படும்.
மேலும் போர் காலத்தில் இடித்து விழ்த்தப்பட்ட தண்ணீர் தாங்கியை மீள கட்டுவதற்கு படையினருடன் பேச்சு நடத்தி வருகின்றோம். அது சாத்தியப்பட்டால் அதனையும் குடிநீர் வழங்குவதற்கு பயன்ப டுத்துவோம்.
நன்னீர் மீன்பிடி தொடர்பாக
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான குளங்கள் காணப்படும் நிலையில் அதிகளவான மக்கள் நன்னீ ர் மீன்பிடியை நம்பியிருக்கின்றனர்.
குறிப்பாக இரணைமடு குளத்தில் சிறிது காலத்திற்கு முன்னர் நன்னீ ர் மீன்பிடியாளர்களுக்க காட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்சமயம் அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றது.
எனினும் தற்போது நிலவும் வறட்சியான கால நிலமையினால் நன்னீர் மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக மாகாண நன்னீர் மீன்பிடி அமைச்சு கு ளங்களில் நன்னீர் மீன் குஞ்சுகளை விடுகின்றார்கள். ஆனால் அவையும் வறட்சியினால் பாதிக்கப்பட் டிருக்கின்றது. இந்நிலையில் பாதிக்கப்படுகின்ற நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு உண்டாகும் இழப்புக்க ளுக்கு நஸ்டஈடும் வழங்கப்படுவதில்லை.
எனவே நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு நன்னீர் மீன்பிடியுடன் மாற்று தொழில் ஒன்றையும் வழங்குவதற்கு யோசித்து வருகின்றோம் என்றார்.
இதேவேளை கி ளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி தேவைகள் மற்றும் பிரச்சினைகள் காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்த தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்த்து கொள்வதற்கு விசேடமான நிதி ஒதுக்கீடு நிச்சயமாக தேவை. அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் நிச்சயமாக பேசுவோம் என்றார்.