பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம் எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2020/2021 ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வழி காட்டி கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையதளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.