பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த ஒருமாத காலமாக மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட இணக்கம் தெரிவித்துள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்கும், ஊழியர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவர்த்தையை அடுத்து பேராட்டத்தை கைவிடுவது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்வி சாரா ஊழியர்கள் விடுமுறைத் தினங்களில் பணியாற்றுவதற்கான கொடுப்பனவை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க இணைக் குழுவின் தலைவர் எட்வர்ட் மல்வட்டகே தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தத் தீர்மானம் தொடர்பில் சுற்று நிரூபம் வெளியிடப்படும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் தொடருமெனவும், 03 ஆம் திகதி தினத்திற்குள் சுற்றுநிரூபத்தை வெளியிடுவதற்கு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊழியர்கள் முன்வைத்துள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரத்தியேக குழு ஒன்றை நியமிப்பதற்கும் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.