பல்கலைகழக மாணவ தலைவர் ரயன் ஜயலத் என்பவரை பலவந்தமாக அழைத்து செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் அவரை அழைத்து செல்ல வந்த வாகனம் நிதி அமைச்சுக்கு சொந்தமானது என ஊர்ஜிதமான தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள பொலிஸ் அதிகாரிகள் சிலர் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிட்டு செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இருந்த போது போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை ஒடுக்க அரசாங்கம் வெள்ளை வேண்களை பயன்படுத்தி ஆட்களை கடத்த முயற்சித்துள்ளதாக அரச வைத்திய சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.