இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d’Or) விருதினை பாரிஸ் செயின்ட்-ஜேர்மன் மற்றும் ஆர்ஜென்டினாவின் முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
34 வயதான மெஸ்ஸி இந்த விருதினை வெல்வது இது ஏழாவது சந்தர்ப்பமாகும்.
கோடையில் பார்சிலோனாவிலிருந்து பாரிஸ் செயின்ட்-ஜேர்மன் அணிக்கு மாறிய மெஸ்ஸி, விருதுக்கான ஓட்டத்தில் போலந்து ஸ்டிரைக்கர் ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி மற்றும் இத்தாலிய மிட்பீல்டர் ஜோர்ஜின்ஹோ ஆகியோரை வீழ்த்தி மதிப்புமிக்க விருதினை திங்களன்று தக்க வைத்துக் கொண்டார்.
2019 இல் ஆறாவது முறையாக பலோன் டி’ஓரை வென்றதன் மூலம் தனது சொந்த சாதனையை மெஸ்ஸி முறியடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு பலோன் டி’ஓர் விருது வழங்கப்படவில்லை.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]