முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று மீண்டும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற பாதைகள் மூடப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்றது. இன்று காலை ஆரம்பமாகிய விசாரணைகள் மாலைவரை நீத்தது. குறித்த விசாரணை நாளைய தினமும் இடம்பெறவுள்ளது.
மேலும், இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 11 ஆம் திகதி 10 ஆம் மாதம் 2015 ஆம் ஆண்டு சந்தேகநபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய 3 பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.