பொலன்னறுவை-கதுருவெல பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 100 வீடுகள் வரை சேதமடைந்ததிருப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரவு நேரத்தில் வீசிய கடும் காற்றின் பாதிப்புக் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் என்பன தடைபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.