பற்றி எரிந்த விமானத்தில் அலறித் துடித்த பயணிகள்! வீடியோ வெளியானது
அமெரிக்கா போயிங் விமானத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் அலறித் துடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான Boeing 767 என்ற விமானம் 170 பயணிகளுடன் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்தில் நேற்று புறப்பட தயாரானது.
அப்போது விமானத்தின் இன்ஜினில் திடீரென தீப்பிடித்து எரிந்தது, இதனால் பயணிகள் அலறித்துடித்து வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.