க.பொ.த. உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சுக்கும், அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கும் பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இம்மாதம் 6, 7, 13, 19 மற்றும் 27 ஆம் திகதிகளில் மாத்திரமே முன்னெடுக்க முடியும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதியில் முன்னெடுப்பதாயின் பிற்பகல் 4.00 மணிக்குப் பின்னரேயே அதனை மேற்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர் தரப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள அதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சை 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களையும் பங்கெடுக்குமாறும் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.