ஈஃபிள் கோபுரத்தின் miniature (சிறிய ரக சிலை) ஒன்றின் மூலம் காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை பரிசின் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது 19 வயதுடைய இளைஞன் ஒருவன், போதிய ஆவணங்கள் இன்றி, ஈஃபிள் கோபுரத்தின் miniature உள்ளிட்ட பல பொருட்களை விற்பதற்காக பல சுற்றுலாப்பயணிகளை இடையூறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனை கைது செய்ய முயலும் போது அவன் தப்பிச் செல்ல முயன்றுள்ளான். வளைத்து பிடித்த காவல்துறை அதிகாரிகள் மீது குறித்த இளைஞன் தாக்குதல் நடத்தியுள்ளான். இரும்பினாலான ஈஃபிள் miniature ஒன்றை காவல்துறை அதிகாரிகள் மீது விட்டெறிந்துள்ளான்.
குறித்த இரும்பிலான மினியேச்சர் அதிகாரியின் தலையில் பட்டு காயமேற்படுதியது. குறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 16 ஆம் வட்டார காவல்நிலையத்தில் குற்றவாளி தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவனது விற்பனைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.