சனிக்கிழமை காலையில், பாரிய வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. வெடிக்கும் நிலையில் தயார்க்கப்பட்ட பாரியவெகுண்டு ஒன்று, பரிசின் செல்வந்தப் பகுதியான 16வது பிரிவில் உள்ள rue Chanez இல் அமைந்துள்ள கட்டடத்தின் முன் இந்த வெடிகுண்டுத் தொகுதி வைக்கப்பட்டிருந்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 4h30 மணியளவில் சிலர் நடமாடும் சத்தம் கேட்டு வெளியே வந்த, அந்தக் கட்டடத்தில் வசிக்கும் ஒருவர், அங்கு வெடிகுண்டு போன்ற அமைப்பு இருந்ததைக் கண்டு காவற்துறையினர்க்கு அறிவித்துள்ளார்.
நான்கு எரிவாயுக் கலன்கள் இணைக்கப்பட்டு, அதனுடன் வெடிக்கும் பொறிமுறையும் இணைக்கப்பட்டு, அதனுடன் ஒரு செல்பேசியுடம் இணைக்கப்பட்டிருந்துள்ளது. தொலைவில் இருந்து கட்டளை வழங்கியவுடன், பாரிய சேதத்தினை உண்டாக்கககூடிய அளவில் இந்த வெடிகுண்டுத் தொகுதி இருந்துள்ளது. இதனைச் சுற்றி அதியுச்ச வெடித்திறன் கொண்ட hydrocarbures வைக்கப்பட்டிருந்துள்ளது.
உடனடியாக இதனைச் செயலிழக்க வைத்த காவற்துறையினரின் வெடிகுண்டுப் பிரிவினர் (démineurs), பயங்கரவாதத் தடைப்பிரிவினரிடம் விசாரணைகளை ஒப்படைத்துள்ளனர்.
இதனடிப்படையில் எசொன் பகுதியில் உள்ள, Arpajon, Draveil ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகள் முற்றுகையிடப்பட்டு, ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி, பிரான்சின் உளவுத்துறையின் ‘S’ பரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை பிரான்சின் உள்ளகப் புலனாய்வுத் துறையான DGSI மற்றும் பயங்கரவாதத் தடைப்பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.