சற்று முன்னதாக, இன்று புதன் கிழமை இரவு பரிசின் முதலாவது பிரிவின் மிகவும் ஆடம்பர பகுதியான place Vendôme இல் அமைந்திருக்கும், அதி ஆடம்பர விடுதியான Ritz இல் கேடாலிகள், பெரும் கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் பெரும் கொள்ளை நடந்துள்ளது.
இந்த ஐந்து நட்சத்திர விடுதியில் இருக்கும் வரவேற்பறையில் ஆடம்பர அதிவிலையுயர் நகைகள் பார்வைக்காக கண்ணாடிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன. கொள்ளையர்கள் இதனைக் குறிவைத்தே களமிறங்கி உள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்டவர்களில் மூவரை, விடுதியின் வாயிலிற்கருகில் மின்னசாரத் துப்பாக்கியை உபயோகித்துக் காவற்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் ஏற்கனவே பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதே நேரம் மற்றைய கொள்ளையர்கள், 4.5 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளனர்;. இவர்கள் சிற்றுந்துருளியில் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த Ritz விடுதியின் உரிமையாளளர் மொகமத் அல் பயத்தின் (Mohamed Al-Fayed) இன் மகனே ஓடி அல்-பயத் ஆவார். இளவரசி டயானாவின் காதலரான இவர், டாயனாவுடன் சேர்த்து விபத்து மூலம் பரிசில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த place Vendôme காவற்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன.