செவ்வாய்க்கிழமை பரிசில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசில் இடம்பெற்ற குழுமோதலில் தொடர்புடையதாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம், பரிசில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 15 வயதுடைய நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லபட்டிருந்தார். இந்த மோதலில் 50 பேர்வரை ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தின் முடிவில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, மோதலில் நேரடி தொடர்புபட்ட மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது.