இன்று பரிஸ் மக்களிற்கு, அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஊட்டக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பரிசின் செய்ன் நதிக் கரையில் திமிங்கலம் (baleine) ஒன்று கரையொதுங்கி உள்ளது. 15 மீற்றர்கள் நீளமுள்ள இந்த திமிங்கலத்தின் உடலம், செய்ன் நதியின் Quai de la Tournelle பகுதயியில் கரையொதுங்கி உள்ளது. இந்தப் பகுதி காவற்துறையினரால் பாதுகாப்புப்பகுதியாக மக்களிற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
இது எப்படி பரிசின் செய்ன் நதிப் பகுதிக்குள் வந்தது என்பதனை ஆராய்ந்து வருகின்றனர். செய்ன் நதியின் ஆரம்பப் புள்ளியான HAVRE சமுத்திரப் பகுதியிலிருந்து இது உள் நுழைந்து இருக்கவேண்டும் என, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் காண்பதற்காகப் பெருமளவான மக்கள் பாதுகாப்புப் பகுதியின் வெளியே கூடி உள்ளனர்.