பயணிகள் விமானத்தின் தலைமை விமானியாக பணியாற்றும் 26 வயதான யுவதி
பிரிட்டனைச் சேர்ந்த கேட் மெக்வில்லியம்ஸ் எனும் 26 வயதான யுவதி, பயணிகள் விமானத்தில் தலைமை விமானியாகப் பணியாற்றுகிறார்.
கேட் மெக்வில்லியம்ஸ்
பிரிட்டனின் ஈஷி ஜெட் விமான சேவை நிறுவனத்தில் கேட் மெக் வில்லியம்ஸ் பணியாற்றுகிறார். வர்த்தக பயணிகள் விமான மொன்றின் தலைமை விமானி யாகப் பணியாற்றும் உலகின் மிக இளமையான நபர் இவர் எனக் கருதப்படு வதாக ஈஷி ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரோயல் விமானப் படையின் அனு சரணையுடன் நடத்தப்படும் இளையோருக்கான எயார் கடெற் சேவையில் 13 வயதில் இணைந்து விமானங்களில் பறக்க ஆரம்பித்த கேட் மெக்வில்லியம்ஸ், தனது 19 ஆவது பிறந்த தினத்தில், இங்கிலாந்தின் சி.ரி.சி. ஏவியேஷன் (CTC Aviation) எனும் விமானி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்காக இணைந்தார்.
2011 ஆம் ஆண்டு ஈஷி ஜெட் நிறுவனத்தில் துணை விமானியாக (பெர்ஸ்ட் ஒபிஷர்) அவர் பணியாற்ற ஆரம்பித்திருந்தார்.
தற்போது அவர் தலைமை விமானியாக (கெப்டன்) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஈஷி ஜெட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு களின்படி, வர்த்தக விமான சேவை யொன்றில் தலைமை விமானியாகப் பணியாற்றும் மிக இளமையான நபர் கேட் மெக்வில்லியம் எனக் கருதப் படுவதாக அந் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக கேட் மெக்வில்லியம்ஸ் கூறுகையில், ‘தனிப்பட்ட ரீதியில் வயது விடயங்கள் பற்றி நான் யோசிப்பதில்லை. ஏனைய அனைத்து தலைமை விமானிகளைப் போலவே சகல வகையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு சித்தி களையும் பெற்றேன்.
எனவே எனது வயது எப்படியிருப்பினும் என்னை நான் நிரூபித்துள் ளேன். தலைமை விமானியாக வேண்டுமென்ற எனது இலட்சியம் நிறைவேறியுள்ளது. இப்போது எனக்கு எத்தனை வயது என்ற கேள்வியை ஏறத்தாழ தினமும் நான் எதிர்கொள்கிறேன்.
நான் துணை விமானியாக இருந்தபோது இவ்வாறான நிலை இருக்க வில்லை. பெரும்பாலும் விமான ஊழியர்கள்தான் இக் கேள்வியை கேட்பார்கள். சில வேளைகளில் பயணிகளும் இக் கேள்வியை கேட்கிறார்கள்.
கேட் மெக்வில்லியம்ஸ் – லூகே எல்ஸ்வேர்த்
நான் 26 வயதானவள் என பதிலளிக்கும்போது பெரும்பாலானவர்கள் வியப் படைவதுடன் இவ்வளவு இளம் வயதில் இந்த நிலையை அடைந்ததை பாராட்டுகின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
எயார் பஸ் ஏ319 மற்றும் ஏ320 ரக விமானங்களை பல நாடுகளிலுள்ள நூற்றுக்கும் அதிகமான நகரங்களுக்கு செலுத்திச் செல்கிறார் கேட் மெக்வில்லியம்சன். உலகிலுள்ள சுமார் 130,000 எயார்லைன் விமானி களில் 450 பேர் மாத்திரமே பெண்கள் என பெண் விமானிகள் அமைப் பொன்று தெரிவித்துள்ளது.
ஈஷி ஜெட் நிறுவனத்தில் துணை விமானியாக பணியாற்றும் 19 வயதான லூகே எல்ஸ்வேர்த் பிரிட்டனின் மிக இளமையான வர்த்தக விமான துணை விமானியாக விளங்குகிறார்.
இவரும் தலைமை விமானி கேட் மெக்வில்லியம்ஸும் ஒரே விமானத்திலும் இணைந்து பணியாற்றுவதும் உண்டு. அண்மையில் லண்டனிலிருந்து மோல்ட்டா நாட்டுக்கு இவர்கள் விமானமொன்றை செலுத்திச் சென்றனர்.