பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில், அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாட்டில் கையொப்பமாகியதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாடு, சிட்னியில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தோனேஷியா, மலேசியா, புரூனை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்குமிடையில் இந்த உடன்படிக்கை கையொப்பமாகியது.
மேலும், இந்த உடன்படிக்கை கையொப்பமானது தொடர்பாக, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) மாநாட்டில் அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில், புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமாகியதாகவும், அவர் கூறியுள்ளார்.