பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதை சவூதி நிறுத்த வேண்டும்
சவூதி அரேபியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
ஒர்லாண்டோ தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் பேசிய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகள் இனியாவது நிறுத்த வேண்டும்.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இளம் சிறுவர்களின் மனங்களில் மதவெறியை விதைக்கும் மதரஸாக்களுக்கும், பள்ளிகளுக்கும் நிதியுதவி அளிப்பதையும் அந்த நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஒர்லாண்டோவில் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதி பொலிஸாரால் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரது மனதில் விதைக்கப்பட்ட நச்சுக் கிருமி இன்னும் உயிரோடு இருக்கிறது என கூறியுள்ளார்.