பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. பப்புவா நியூ கினியாவில் நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 67 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த செஞ்சிலுவை சங்கத்தினர் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அங்குள்ள மலை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.