பனிப்புயலின் பேரழிவு தாக்கத்தினால் இருவர் மரணம்.
கனடா-நியு பிறவுன்ஸ்விக் மக்கள் மின்சாரம் இன்றி மூன்று நாட்களாக தவித்துள்ளனர். அப்பகுதியில் பேரழிவை எற்படுத்தியுள்ள பனிப்புயலினால் காபன் மொனொக்சைட் நச்சுத்தன்மை காரணமாக இருவர் மரணமடைந்ததுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் ஜெனரேட்டர்கள் பார்பிக்கியுக்கள் மற்றும் உட்புறங்களில் திறந்த எரிப்புக்களை தங்கள் வீடுகளிற்கு வெப்பம் ஏற்றுவதற்காக பயன்படுத்துவதால் அபாயம் ஏற்படும் என முதல்வர் மக்களிற்கு ஞாபகப்படுத்தியுள்ளார்.இந்த வாரம் இடம்பெற்ற பனிப்புயலின் பின்னர் இடம்பெற்ற மறுசீரமைப்பு முயற்சிகளின் பின்னர் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
62வயது மற்றம் 74வயதுடைய இரு பெண்கள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30-மணியளவில் 56,000ற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டுள்ளனர். புயலின் உச்சக்கட்டத்தில் 130,000ற்கும் மேற்பட்ட மக்கள் இருட்டில் விடப்பட்டனர்.
வெள்ளி இரவு சில பகுதிகளிற்கு மின்சாரம் மீண்டும் கிடைத்துள்ளது.
வேறு சில பகுதிளிற்கு மின்சாரம் கிடைக்க நாட்கள் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளை வெப்பமாக வைத்திருக்க என்ன செய்யலாம் என அறியாது தவித்துள்ளனர்.