பனிச்சரிவினால் 120மீற்றர்கள் பள்ளத்தில் தள்ளப்பட்ட மனிதன்!
வன்கூவர் மேற்கு மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் பனிச்சறுக்கு விளையாட்டாளர்கள் இருவர் காப்பாற்ற பட்ட சம்பவம் நடந்துள்ளது. இவர்களில் ஒருவர் மலையுச்சியில் இருந்து வீசப்பட்டு ஆழமான பனிக்குள் அகப்பட்டு கொண்டதாக பாதுகாப்பு குழவினரின் தகவல் பிரகாரம் தெரிய வந்துள்ளது.
சரியான கியரை எடுத்து சென்றிராவிடில் இரு மனிதர்களும் இறந்திருப்பார்கள் என வடக்கு கடற்கரை மீட்பு குழு தெரிவித்துள்ளது.
இரு பனிச்சறுக்கு விளையாட்டாளர்களில் ஒருவரை பனிச்சரிவு 120மீற்றர்கள் பள்ளத்திற்கு அடித்து சென்றதுடன் மலை உச்சியில் இருந்தும் தள்ளிவிட்டதாக மீட்பாளர்கள் தெரிவித்தனர்.
இவரது பங்காளர் குறியொழி மற்றும் துறவுகோலின் உதவியுடன் கிட்டத்தட்ட இரண்டு மீற்றர்கள் பனியை தோண்டி தனது நண்பனை காப்பாற்றியுள்ளார்.
மீட்பு குழுவினர் வந்து இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரை இருவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கினர்.
பாதிக்கப்பட்டவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர் உயிர் பிழைத்தது அதிஷ்டம் என கூறப்படுகின்றது. இவரை கண்டுபிடித்த போது மூச்சு இருந்தது.
இவர் கிட்டத்தட்ட ஆறு அடிகள் ஆழமான பனிக்குள் ஐந்து நிமிடங்கள் வரை இருந்துள்ளார் என மீட்பாளர்கள் தெரிவித்தனர்.