பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்.
இந்த நிலையில் பத்திரிகையாளர் கவுரி லங்லேஷ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
கவுரி லங்கேஷ் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், “மரியாதைக்குரிய பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கவுரி லங்கேஷின் குடும்பத்தினர், நண்பர்கள் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கு எங்கள் ஆழ்த்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.