இலங்கையின் பாதுகாப்பு படையினர் பத்திரிகையாளர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து அதிகாரிகள் முழுமையான துரித விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு எக்ஸ்போஸ் நியுசின் பணியாளர்களை துன்புறுத்துவதை அதிகாரிகள் நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜூலை 22 ம் திகதி அதிகாலை தனியார் டிஜிட்டல் செய்திதளமான எக்ஸ்போஸ் நியுசின் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட நான்கு பத்திரிகையாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலை மேற்கொண்டனர், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதி மீதான பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கை குறித்தும் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் செய்திசேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே தாக்கப்பட்டனர் என சிபிஜேயுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டங்கள் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட மூன்று பத்திரிகையாளர்களை தேடி 27 ம் திகதி எக்ஸ்போசர் நியுசின் அலுவலகத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர் என அந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
தொடரும் பொருளாதார அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளன,ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச 13 ம் திகதி நாட்டிலிருந்து தப்பிவெளியேறிய பின்னர் மறுநாள் தனது பதவியை இராஜினாமா செய்தார்.21ம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இலங்கையில் அரசியல் அமைதியின்மை குறித்த செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் உடனடியாக முடிவிற்குவரவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் திட்ட இயக்குநர் கார்லோஸ் மார்ட்டினெஸ் மட்ரிட்டில் தெரிவித்தார்.
அதிகாரிகள் இந்த தாக்குதல்கள்குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்,குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும்,எக்ஸ்போசர் நியுசின் பணியாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 22 ம் திகதி பிபிசியின் கமரா இயக்குநர் மற்றும் வீடியோ எடிட்டர் ஜரீன் சாமூவேலை பாதுகாப்பு தரப்பினர் தாக்கினார்கள் – கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்ட முகாமின் மீது படையினரின் தாக்குதல் குறித்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்தவேளையே அவர் மீது தாக்குதல் இடம்பெற்றது,என பிபிசியின் செய்திகளும் எங்களுடன் தொலைபேசி மூலம் உரையாடிய சாமுவேலும் தெரிவித்தனர்.
நானும் எனது குழுவினரும் நாங்கள் ஊடகவியலாளர்கள் என்பதற்கான ஆவணங்களை press IDs and foreign accreditation cardஅதிகாரிகளிடம் காண்பித்தோம் ஆனால் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் என்னை தாக்கினார்கள் நிலத்தில் தள்ளிவிழுத்தி வயிற்றில் காலால் உதைத்தார்கள் என தெரிவித்த சாமுவேல் எனது கையடக்க தொலைபேசியை பறித்து அதிலிருந்த வீடியோக்களை அழித்த பின்னர் திருப்பி கொடுத்தனர் எனவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக தான் உள்ளுர் மருத்துவனையில் காயங்களிற்கு கிசிச்சை பெற்றதாக அவர் தெரிவித்தார்.