கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயில் ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கும் இடையில் உள்ள பாலத்திற்கு அருகில் வைத்து ரயில் தடம் புரண்டுள்ளது.
தடம் புரண்டதால் 4 பெட்டிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ரயில் பாலமும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(13) அதிகாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலபிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
சேதமடைந்த பெட்டிகளை அகற்றி அந்த ரயில் பதுளை வரை பயணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் பாதை வழமைக்கு திரும்பும் வரை மலையக ரயில் போக்குவரத்து நடவடிக்கை ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்கள் இடையே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.