கட்சி பதவிகளில் இருந்து சிறிது காலம் ராஜபக்சாக்கள் விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் கூடிய சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெரமுனவின் நிறைவேற்று சபையில் உரையாற்றும் போதே
விஜேராமவில் உள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சமல் ராஜபக்சவின் கருத்தையும் மீறி
கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்ட போதே சமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
எனினும், சமல் ராஜபக்சவின் கருத்தையும் மீறி பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க செயற்குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.