பதக்க நாயகி சிந்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுடன் Baseline(Sports Management Company)நிறுவனம் ரூ. 50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய நாட்டுக்கு பெருமை தேடித் தந்தார்.
இதைத் தொடர்ந்து பாராட்டு மழையோடு, பரிசு மழையிலும் நனைந்தார் சிந்து. அவருக்கு ரூ.13 கோடிக்கும் அதிகமாக பரிசு தொகை கிடைத்தது.
இந்ந நிலையில் Baseline நிறுவனம் ஒன்று பி.வி. சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது