சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்ற பதக்கங்களை விற்க முடியாத வகையில் புதிய சட்டமொன்று அமுல்படுத்தவுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
சமீபத்தில் வறுமை காரணமாக தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை விற்கப்போவதாக வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க தெரிவித்தார்.
இவர் கடந்த 2000ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர், ஒலிம்பிக் பதக்கம் என்பது அவரது தனிப்பட்ட சொத்து அல்ல, நாட்டுக்கு சொந்தமானது.
பதக்கத்தை விற்பதற்கு சுசந்திக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை, எதிர்காலத்தில் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்ற பதக்கங்களை விற்க முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்