பண்டாரவெல அல்லே திக்அராவ பிரதேசத்திலுள்ள 150 குடும்பங்கள் நேற்றிரவு (27) திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று அப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் மண்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதனாலேயே இவர்கள் இவ்வாறு இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தினால் இப்பிரதேசத்திலுள்ள பல வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், நிலங்களிலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் பண்டாரவெல பிந்துனுவெவ இளைஞர் படையணி கட்டிடத் தொகுதியில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.