புகையிரத சாரதிகள் சங்கத்தினரின் திடீர் பணிப்புறக்கணிப்பால் 65 புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை (24) இரத்து செய்யப்பட்டன.
புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டனர். புகையிரத சேவை நாளை செவ்வாய்க்கிழமை (25) வழமை போல் இடம்பெறும்.
பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காணலாம். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என புகையிரத சாரதிகள் சங்கத்தினரிடம் தூய சிங்களத்தில் குறிப்பிட்டேன். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.