தொடரூந்து தொழிலாளர்களின் தொடர் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நஷ்ட்ட ஈடு வழங்க உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. பயணிகளுக்கு பணத்தை மீள செலுத்துவது தொடர்பான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 27) இடம்பெற்றுள்ளது.
Transilien சேவை மூலம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மே மாதம் 17 ஆம் திகதி நஷ்ட்ட ஈடு வழங்கப்படும் எனவும், TER சேவைகளில் பாதிக்கப்பட்டோர்களுக்காக ஜூன் மாதத்தில் தங்களது பயணத்தில் 50 வீத விலைக்கழிவு மாதம் முழுவதும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TGV மற்றும் Intercités சேவைகளில் பாதிக்கப்பட்டோருக்கும் சில இலவச சேவைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். அதேவேளை TGV பயணிகள் தங்கள் பயணங்களை பிற்தள்ளி போடச்சொல்லி கோரப்பட்டுள்ளனர்.