வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும் இணைந்து இந்த சோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களின் வயதெல்லையின் அடிப்படையில் குறித்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் பணியாற்றுவதற்காக குழந்தைகளை கொழும்புக்கு அழைத்து வந்து, பின்னர் முதலாளிகள் என்று அழைக்கப்படுபவர்களால் கொடுமை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகமாகப் பதிவாகியுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.