பணயக்கைதிகளை மீட்க கப்பம் கொடுப்பதில்லை: கனடா உறுதி
தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்காக கப்பம் கொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் கனடா உறுதியாக இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் இடம்பெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ஜஸ்ரின் ரூடோ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இறுதிநாள் கலந்துரையாடலில் மீண்டும் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘ ஜி-7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் குறித்து பெருமளவில் கவனம் செலுத்தப்பட்டது. நாங்கள் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக கப்பம் செலுத்தமாட்டோம் என புதுப்பிக்கத்தக்கஉறுதியை வழங்கியுள்ளேன்.
கப்பப்பணத்தினை செலுத்துவதன் மூலம், உலகம் முழுவதும் பணத்திற்காக ஆட்கடத்தல் வளர்ச்சியடைவதற்கு வழிவகுக்கும். இதனால் உலகம் முழுவதும் உள்ள குடிமக்கள் ஆபத்தில் தள்ளப்படுவர்.
எனவே கணிசமான ஆதாரம் இல்லாமல் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கப்பம் கொடுக்க முடியாது’ என வலியுறுத்தியுள்ளார்.