வேலையற்ற பட்டதாரிகளின் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.
அவ்வேளை கல்வி அமைச்சு வருகை தந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆர்ப்பாட்டக்காரர்களை அவதானித்து அவர்களிடம் வந்தார்.
அதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரில் ஐவரை கலந்துரைாடலுக்கு வருமாறு அழைத்தார். மிக விரைவில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றும் எனவே அனைவரும் வீடுகளுக்கு செல்லுமாறும் கல்வி அமைச்சர் வேண்டிக் கொண்டார்.
இன்று அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி பெறப்படும். மாத இறுதியில் பரீட்சைத் திணைக்களம் பரீட்சையை அறிவிக்கும் நீங்கள் பரீட்சைக்குத் தோற்றுங்கள். பிரச்சினை முடிந்தது தானே. நான் வேலையைச் செய்கிறேன். நீங்கள் இப்போது வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றார்.