பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள போரா பகுதியில், திருவிழாவிற்கு செல்வதற்காக, 70 பேர் படகில் பயணித்தனர். ஓடையின் சென்ற படகு, பாரம் தாங்காமல் நடு வழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
இதுவரை, 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில், மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.