ஜார்க்கண்டை சேர்ந்த 11 வயது சிறுமி பசி கொடுமையால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது, எனினும் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குழப்பமே நீடிக்கிறது.
அப்படி இணைக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படமாட்டாது, இதனால் ரேஷன் பொருட்களை நம்பியே வாழும் குடும்பங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.இந்நிலையில் ஜார்க்கண்டை சேர்ந்த 11 வயது சிறுமி சந்தோஷ் குமாரி பசி கொடுமையால் கடந்த மாதம் 28ம் திகதி உயிரிழந்தார்.
இதற்கு காரணம் ரேஷன் பொருட்கள் கிடைக்கப்பெறாததே, ஆதார் எண்ணுடன் இணைக்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்தானதாம்.கடந்த ஆறு மாதங்கள் இவர்களது குடும்பத்துக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் பட்டினியில் வாடியுள்ளனர்.மிகவும் வறுமையில் வாடும் அந்த குடும்பத்தினர், போதிய கல்வியறிவு பெறாதவர்கள் என தெரிகிறது.
தங்களது ரேஷன் கார்டை, ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என்ற விவரமும் அவர்களுக்கு தெரியவில்லையாம்.ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என உச்சநீதிமன்றமே வலியுறுத்திய போதிலும் மத்திய அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.