நிறைய இளம் பெண்கள் பங்கு சந்தையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வட இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.
‘‘எல்லா வேலையிலும், எல்லா துறையிலும் ‘ரிஸ்க்’ இருக்கத்தான் செய்யும். பங்கு சந்தை வர்த்தகமும் அப்படிதான். என்ன..? மற்ற துறைகளை விட, இதில் ‘ரிஸ்க்’ கொஞ்சம் அதிகம் என்றாலும், லாபமும் அதிகமாகவே இருக்கும். அதனால்தான், பங்கு சந்தை மீதான ‘இன்ட்ரஸ்ட்’ அதிகரித்தது’’.
மற்ற எல்லா வேலைகளை விடவும், பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது கொஞ்சம் சுலபமானது. வேலை பளுவும் குறைவானது. பங்கு சந்தை வர்த்தகத்தின் செயல்பாடுகளையும், உலக நகர்வுகளுக்கு ஏற்ப ஏறி இறங்கும் பங்கு மதிப்புகளையும் உணர்ந்து கொண்டால், ஷேர் மார்க்கெட்டை டென்ஷன் இன்றி அணுகலாம்.
மார்க்கெட் ரிசர்ச் அனலைஸ்ட், டீலர், டிரேடர், இன்வெஸ்மெண்ட் கன்சல்டண்ட், ரிஸ்க் அனலைஸ்ட், இகுட்டி அனலைஸ்ட்… இப்படி பலவிதமான வேலைகள் பங்கு சந்தையில் உண்டு. பங்கு சந்தை பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை கவனிப்பது, மாத, ஆண்டு அறிக்கைகளை புரட்டி பார்ப்பது, முதலீட்டு நோக்கங்களை தெரிந்து கொள்வது… இப்படி பங்குகளை வாங்குவதற்கு முன்பாகவும், விற்பதற்கு முன்பாகவும் நிறைய ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்போதுதான், சந்தையில் பங்கு மதிப்பு குறையும்போது வாங்கி, அதிகரிக்கும்போது விற்று லாபம் பார்க்க முடியும். இந்த டேட்டா ரிசர்ச் ஆய்வுகள், பங்கு சந்தையில் லாபம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது.
நிறைய இளம் பெண்கள் பங்கு சந்தையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வட இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பங்கு சந்தை மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இருப்பினும் வெளிப்படையாக தெரிவதில்லை. யூ-டியூப்பை திறந்து பார்த்தால், அதில் நிறைய தமிழ் பேசும் பெண்கள் பங்கு சந்தை பற்றிய தகவல்களை விளக்கி கொண்டிருப்பதை பார்க்க முடியும்.
பங்கு சந்தையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு சின்ன முதலீடு போதும். உங்களுக்கான வருமானத்தை நீங்களே தேடிக்கொள்ள முடியும். ரிஸ்க் இருப்பது உண்மைதான் என்றாலும், வர்த்தகம் பற்றிய உள்ளார்ந்த அறிவும், தொழில் நுணுக்கமும் உங்களை பங்கு சந்தை வர்த்தகத்தில் கரை சேர்த்துவிடும். அதனால் துணிந்து இறங்குங்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]