முதலாவது இன்னிங்சில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி முதலாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 56 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ரொஷேன் சில்வா 56 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். நாளை முதலாவது இன்னிங்சின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.