பங்களாதேஷில் உணவகம் மீது தீவிரவாத தாக்குதல்! சிக்கிய இரண்டு இலங்கையர்கள்
பங்களாதேஷில் இன்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் இரண்டு பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று இரவு திடீர் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் பலியானதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிப்பிரயோகத்துக்கு ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருப்பதாக சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் உணவகத்தில் இருந்த 20 பேரை தீவிரவாதிகள் பணயக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த தகவலை ட்விட்டரில் பதிந்துள்ளது. தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 20 பேரில் இரண்டு இலங்கையரும் உள்ளடங்கிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.