நாம் நினைத்தது நடைபெற கோவிலுக்கு சென்று வழிபடுவோம், வெளிநாட்டில் வேலை, கல்வியில் முன்னேற்றம், செல்வம் கொழிக்க இப்படி ஏராளமான கோரிக்கைகளுடன் கடவுள் முன் நிற்போம்.
இதற்காக பலரும் பலவிதமான பரிகாரங்களை செய்வார்கள், ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு தனிச்சிறப்பும் இருக்கும்.
அந்த வகையில் சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வணங்கினால் வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.
சுமார் 943 ஆண்டுகளுக்கு முன்னர் உக்கிரபாண்டிய மன்னர் இக்கோவிலை நிர்மாணித்ததாக தலவரலாறு கூறுகிறது.
ஐம்பூத தலங்களில் முதல் தலமான இக்கோவிலை மண் தலம் என்றும் அழைக்கிறார்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் சிறக்க இங்கு வருகின்றனர்.
இக்கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் என மூன்று சன்னதிகள் உள்ளது.
கோவில் வாயிலில் சங்கரலிங்க பெருமான் சன்னதி உள்ளது. வடபகுதியில் கோமதியம்மையும், தென் பகுதியில் சங்கர நாராயணரும் உள்ளனர்.
கோமதியம்மனுக்கு செவ்வரளிப் பூக்களை பரப்பி, மாவிளக்கேற்றி வழிபடும் முறை சிறப்பாக பார்க்கப்படுகிறது, அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னர் தரப்படும் பிரசாதபாலை தொடர்ந்து முப்பது நாட்களுக்கு பருகி வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
ராகு கேது தோஷம் நீங்கும் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும்.
அம்மன் சந்நதி பிராகார வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்பவருக்கு கெடுபலன் குறையும் என்பது நம்பிக்கை.
ஆடி தபசு திருவிழாவின் போது தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை எல்லாம் தபசு காட்சி நடக்கும் இடத்தில், காட்சி தரும் சிவன், சக்தி மீது போடுவார்கள். விளைபொருள்களை அம்மை அய்யன் மீதும் மீதும் போட்டால் அந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
பெரிய பூஜைகள், ஹோமங்கள், வழிபாடுகள் நடத்த முடியாதவர்கள் கோமதி அம்மனின் பெயரை மனதார உச்சரித்து கொண்டிந்தாலே போதும், முழுமையான பலன்கள் கிடைக்கும்.