நோயாளிகளிடமிருந்து 700,000டொலர்கள் கடன் வாங்கிய மார்க்கம் டாக்டர்!
கனடா-மார்க்கத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவரின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.இவர் இரண்டு நோயாளிகளிடமிருந்து 700,000டொலர்களிற்கும் மேற்பட்ட தொகையை கடனாக வாங்கியது மட்டுமன்றி வாங்கிய தொகையின் பெரும் பகுதியை திரும்ப கொடுக்க வில்லை என்பதே காரணமாகும்.
மருத்துவர்கள் மற்றும் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் கல்லூரி டாக்டர் மிர்சா றாசபாலி விரானி 67-வயது அடுத்த எட்டு மாதங்களிற்கு மருத்துவ பயிற்சி செய்ய முடியாதென அறிவித்துள்ளது.
மார்க்கம் ஒன்ராறியோவை சேர்ந்த இந்த வைத்தியர் ஒரு இழிவான அகௌரவமான அல்லது தொழில் அவமதிப்பான முறையில் நடந்து கொண்டுள்ளார் என அதன் தண்டனை தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
விரானியின் நோயாளிகள் அடையாளம் காட்டப்படவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் வைத்தியரை நம்பியதுடன் மதித்துள்ளனர் எனவும் அவர் தங்களிற்கு முக்கியமானவர் சிறந்தவர் எனவும் கருதியுள்ளனர்.
இருவரதும் நிதி நிலைமையை அவர்களது மருத்துவ நியமனங்களின் போது அறிந்து கொண்டார். கடன் தொடர்கள் மூலம் அவர்களது பணத்தை தன்னுடன் முதலீடு செய்ய தூண்டியுள்ளார்.
முதலாவது நோயாளி 500,000டொலர்களிற்கும் மேலான தொகையை கடனாக கொடுத்துள்ளார். 2006-ற்கும் 2007-ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இக்கொடுப்பனவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணம் இவரது லைன் ஒவ் கிரடிட் மூலம் வெளிவந்துள்ளது.
நோயாளியின் முதலீட்டை-கிட்டத்தட்ட 30,000டொலர்களிற்கும் அதிக– விரைவில் திரும்ப கொடுப்பதாக விரானி தெரிவித்துள்ளார்.ஆனால் வைத்தியர் 130,000 டொலர்களிற்கும் குறைந்த தொகையை நோயாளியின் கடன் தொகை என திரும்ப கொடுத்துள்ளார்.
இரண்டாவது நோயாளியிடமிருந்து பல நூறாயிரம் டொலர்களை கடனாக பெற்றிருக்கின்றார் என தெரியவந்துள்ளது. இவர் டாக்டரை நீதிமன்றம் கொண்டு சென்றார்.கோர்ட் கடனை கொடுக்குமாறு டாக்டரிற்கு கட்டளையிட்ட போதும் அவர் கொடுக்கவில்லை.
பாதிக்கப்பட்ட தாக்க அறிக்கையில் இரண்டாவது நோயாளி நிதி இழப்பு காரணமாக நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
2011ல் கடைசி கடன் பெற்ற பின்னர் விரானி திவாலா நிலை மனு தாக்கல் செய்தார்.
திவாலா நிலை முடியும் 2017ல் முதலாவது நோயாளிக்கு 448,000டொலர்களும்இரண்டாவது நோயாளிக்கு 289,000டொலர்களும் செலுத்த வேண்டும்.
ஆரம்ப விசாரனையின் போது இடம்பெற்ற குறுக்கு விசாரனையில் தனது கடனை திரும்ப கொடுக்க போவதில்லை என விரானி தெரிவித்துள்ளார்.
தற்சமயம் இவர் மீது எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை என யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.