நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்! நான்கு பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் உள்ள புர்லிங்டன் நகரில் பெரிய ஷாப்பிங் மால் உள்ளது.
நேற்று மாலை மால் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அந்த இடத்துக்கு போய் மக்கள் பார்கையில் நான்கு பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியிருந்தனர்.
Hour ago… active shooter near#CascadeMall in #Burlington,#Washington.
Police :: Hispanic male, seen walking towards I-5VidSkagitNews
மேலும் அந்த நான்கு பேரை சுட்டு கொன்று விட்டு அந்த கொலைகாரன் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டான் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் வெள்ளிகிழமை மாலை 7.30க்கு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த நொடியின் போது அங்கிருந்த மற்ற மக்களும், கடைகாரர்களும் பயத்தில் தனி தனி கடைக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
பொலிசார் குற்றவாளிகளை தேடி வரும் நிலையில், சம்பவம் நடந்த அந்த ஷாப்பிங் மால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.