ரயில் சாரதிகள் நேற்று (23) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரயில் இன்ஜின் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ரயில் பாதுகாப்பு ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கப் பெற்றிருப்பதாக ரயில் இன்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இன்ஜின் சாரதிகளின் ஒப்பந்த காலத்தை நீடிக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள இந்திக, நாளை தினம் தீர்வு வழங்க அதிகாரிகள் தவறின் கடுமையான தீர்மானத்துக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.