விளையாட்டு துறை மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாக பட் டதாரிகள் . விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த திங்கள் முதல் இடம்பெற்று வருகின்றன . இத் தேர்வில் கணனி அறிவு , ஆங்கில அறிவு , சிங்களம், அறநெறி, வகுப்புத்தலைவர், மாணவத் தலைவர், சாரணியம் , விளையாட்டு மற்றும் சமுதாய நிறுவனங்களில் சமூக சேவை அல்லது பதவி வகிப்பின் ஆதாரத் சான்று என்பவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டு வருகின்றது. என்றும் இவை தவிர இணைப்பாடவிதான செயற்பாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ள வினாவின் புள்ளியிடலில் கலைச் செயற்பாடுகள் நிராகரிக்கப் பட்டு புள்ளிகள் வழங்கப்படாமல் .
கலைச் செயற்பாடுகள் தவிர்த்து விளையாட்டுத்துறை மட்டுமே இணைப்பாடவிதான செயற்பாடு எனக் குறிப்பிட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து நேர்முகத் தேர்வில் பங்கு கொண்ட பட் டதாரி ஒருவர் குறிப்பிடுகையில் ” போராட்டத்தின் பின்னர் நடைபெறும் பரீட்சை அற்ற நேர்முகத் தேர்வாக இருப்பதில் மகிழ்ச்சி . இது முழுவதுமே அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பணிநிலை. நாம் விரும்பும் பணியை பெற முடியாத நிலையும் உண்டு. ஆயினும் நாம் மிக முக்கியம் இல்லை என தவிர்த்த , கிடப்பில் போடப்படட சான்றிதழ்கள் இப்போ கேட்கப்படுகின்றன.
பாடசாலை பதிவு புத்தகம் , மாணவ செயற்பாட்டு பதிவு புத்தகம், சாரணியம், செஞ்சிலுவைச் சங்கம், பொது அமைப்புக்களில் பதவி வகித்தல் என்று பட்டதாரி தகைமைகளுக்கும் அப்பால் கேட்கப் படுகின்றன, . மேலும் பல பட் டதாரிகள் 2009 இன் பின் தமது ஆவணங்களை இழந்து உள்ளனர். அவர்கள் நிலையை சொன்னபோதும் ஆவணங்கள் பெற முடிந்தால் பெற்றுத் தரவும் என்றும் , இல்லையேல் புள்ளிகள் வழங்கப் படாது என்றும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் இந்த ஆவணங்கள் தேவை என்பது பற்றி நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக்கு கடிதத்திலும் குறிப்பிடப் படவில்லை. .
கடிதத்தில் குறிப்பிடப்பட் டதை மட்டும் கொண்டு செல்பவர்கள் மீதி ஆவணங்கள் இன்றி மன உளைச்சலுக்கு ஆளாகியும் வருகின்றனர், பயிலுனர் என்றும் இரண்டு வருட பயிற்சி என்றும் எமது காலத்தையும் நேரத்தையும் மீண்டும் நாசம் செய்வதுடன் எம்மை ஏமாற்றும் ஓர் செயற்பாடாகவே இந்த நேர்முகத் தெரிவினைப் பார்க்க முடிகின்றது .அத்துடன் பணிநிலை அனைவருக்கும் கிடைக்காத நிலை ஏற்படும் வகையில் இந்த ஒழுங்கமைப்பு இருப்பதாகவும் அச்சம் கொள்கின்றனர். என்கிறார்.