நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி புத்தர் பிறந்த லும்பினி சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் துபா வரவேற்றார்.
பின்னர் லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
மாயதேவி ஆலய தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.
இதன் பின்னர் புத்த கலாசார பாரம்பரிய மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபாவும் நீர்மின்சாரம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
மறுப்புறம் இருநாடுகள் இடையே 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
லும்பினி புத்த பல்கலைக்கழகம், திரிபுவன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இந்திய கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை தலா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
காத்மாண்டு பல்கலைக்கழகத்துடன் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டது.
புத்த ஜெயந்தியை முன்னிட்டு, நேபாள அரசு ஏற்பாடு செய்துள்ள கொண்டாட்டத்தில் நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.