நேபாளத்தின் பல மாவட்டங்களில், கடந்த, இரண்டு வாரங்களுக்கும் மேலாக, கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை, 132 பேர் உயிரிழந்துள்ளனர்; 128 பேர் காயமடைந்துள்ளனர்; 53 பேர் காணாமல் போயுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு அருகே, நேற்று இரவு, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம்பீஜிங்: அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜிங்பிங், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தவறிவிட்டதாக, முன்னாள் அரசு அதிகாரி ரென் ஜிக்கியாங், கடந்த பிப்ரவரியில் குற்றஞ்சாட்டியிருந்தார். அரசின் கீழ் செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவர், அரசை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், அவர் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நேற்று நீக்கப் பட்டுள்ளார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து, வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் மாயமாகி உள்ள ரென், எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.