கொழும்பு, கண்டி,காலி, தம்புள்ளை , யாழ்ப்பாணம் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் 4 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரொன்றை நடத்துவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் 50 ஓவர்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டி நிறைவடைந்து, ஒரு வாரத்திற்குள் 4 நாட்கள் கொண்ட நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த 4 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரானது, கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்வதுடன், புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். அரை இறுதிப் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகள் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதியன்று காலியில் ஆரம்பமாகும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]