சைட்டம் மருத்துவ கல்லூரியை நடாத்த தேவையான நோயாளர்களை நெவில் பிரணான்டோ வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுப்பதற்கான ஒப்பந்தத்தையே அரசாங்கம் நேற்று நிறைவேற்றியது என மஹிந்த சார்பு குழு எம்.பி. உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. அரசாங்கத்திற்கு நெவில் பிரணான்டோவைத் திருப்திப்படுத்துவதே முக்கியமாகப் போயுள்ளது.
நேற்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசுடைமையாக்குமாறு சைட்டம் எதிர்ப்பில் ஈடுபட்ட எவரும் கோரவில்லை. சைட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்குமாரே கூறியனர்.
சயிட்டம் மற்றும் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை ஆகிய இரண்டும் ஒன்றல்ல வேறுவேறு. நெவில் பெர்ணான்டோ என்பது தனியார் வைத்தியசாலை, சைட்டம் என்பது சட்டவிரோத வைத்திய பீடம்.
நோயாளர்கள் இன்றி, சைட்டம் வைத்திய பீடத்தை நடத்த முடியாது இருந்த நெவில் பிரணான்டோவின் பிரச்சினைக்கே அரசாங்கம் இவ்வொப்பந்தத்தின் மூலம் தீர்வை வழங்கியுள்ளது.