இலங்கையின் நெருக்கடியில் சிறந்த அண்டை நாடாக இந்தியா செயற்படுவதாகவும் அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இந்த நெருக்கடியான சூழலில் உதவுவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பாரதூரமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கும் இலங்கைக்கான உதவிகளை விரைவுபடுத்த இந்திய அமைப்பு மேலதிக நேரமாக(ஓவர் டைம்) வேலை செய்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தனது கொழும்பு பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில், சாதாரண வேகத்தில் விடயங்களை செய்ய முடியாது. எல்லாவற்றையும் வேகமாக கண்காணிக்க வேண்டும்.
எனவே இந்தியா கூடுதல் நேரம் வேலை செய்கிறது.
இந்தநிலையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் திட்டம் மிக விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நெருக்கடியில் நல்ல அண்டை நாடாக இந்தியா செயற்படுகிறது. அதேநேரம் அரசியலில் இருந்து விலகி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
$400 மில்லியன் நாணய பரிமாற்றம், $500 மில்லியன் கடன் ஒத்திவைப்பு, எரிபொருளுக்கான $500 மில்லியன் கடன் மற்றும் ஒரு பில்லியன் டொலர் கடன் வரி என்பவற்றை புதுடில்லி இந்த ஆண்டு இலங்கைக்கு வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு குறிப்பிட்ட விடயங்கள் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது இரு தரப்பினரும் குறிப்பிட்ட, செயற்படக்கூடிய புள்ளிகளை அடையாளம் கண்டு அவற்றில் இணக்கம் கண்டுள்ளனர் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்னும் உரையாடல் முடிவடையவில்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]