பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிவாரண வரவு – செலவு திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டினை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துமாறு உணவு பாதுகாப்பு திட்ட தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குது தொடர்பில் இதன் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சூழலை தயார்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைதியான போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட திட்டம் சிறந்த திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.