பந்தை சேதப்படுத்தியதற்காக குற்றத்திற்காக நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் விவியன் கிங்மாவுக்கு ஐ.சி.சி. நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி:20 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.
தோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடும் போது போட்டியில் 31 ஆவது ஓவரில் விவியன் கிங்மா பந்தை சேதப்படுத்தியதாக ஐ.சி.சி. கூறியுள்ளது.
இந்த போட்டியில் அவர் 10 ஓவர்களுக்கு பந்து பரிமாற்றம் மேற்கொண்டு 50 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]